பா.சுபாஷ் சந்திர போஸ்
பெ/பெ.பாஸ்கர்-தங்கம்,
22,வடக்கு மாட விளாகம்,
திருவரூர்.
ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனை
சான்றோன் எனக்கேட்ட தாய்.
இவர் தமது 9ம் அகவை முதல் 1330 குறளையும்
அதற்கான விளக்கமும் கூறி திருவாரூரின் சின்னத் திருவள்ளுவராக வளம் வந்தவர்,பள்ளிகள்
தோறும் சென்று சகமாணவர்களுக்கு குறளின் அருமை பெருமைகளைக் கூறி தம் மழலையால்
கவர்ந்தவர்,எம் பள்ளிக்கும் வந்திருந்து தமிழின் இனிமையையும்,திருக்குறளின்
பெருமைகளையும் கூறியது வியக்க வைத்தது.
இம்மழலையின் சாதனைகளைப் பாரட்டி இவருக்கு பல
பட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன.
திருவாரூரின் சின்னத் திருவள்ளுவர்,
திருவாரூரின் திருஞானசம்பந்தர்,
CAR LION CITY வழங்கிய குறள்வேந்தன்,
திருவாரூர் மனிதநேயப் பேரவை வழங்கிய
குறள்மணிச்சுடர்,
திருவாரூர் தமிழியக்கம் வழங்கிய பாரதிதாசன்
விருது,
இவரது சிறப்பினை தமிழக அரசு பாராட்டி சான்றிதழ்
மற்றும் விருது வழங்கியுள்ளது.
மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்னோற்றான் கொள்எனுஞ் சொல்.
இவர் தொண்டு மேலும் சிறந்து உலகம் முழுவதும் பரவ
எம் பள்ளியின் சார்பாக நெஞ்சார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.