Saturday, 24 December 2022

Canva app டிசைனராகும் அரசு பள்ளி மாணவர்கள்

நம் பள்ளி தகவல் தொழில்நுட்ப மன்றம் மூலம் மாணவர்களுக்கு, இக்காலத்திற்கு ஏற்ற பல்வேறு கணினி மற்றும் இணையம் தொடர்பான பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.

அதன் தொடர்ச்சியாக,

 Canva என்னும் மென்பொருள் மூலம் கற்றலுக்கு தேவையான வளங்களை உருவாக்க முடிவெடுக்கப்பட்டு,நேற்று(23-12-2022) மன்றத்தினருக்கு,

*Canva app installation

*Canva account creation

*Canva students pro activation

*Joining Canva classrooms

*Editing posters 

ஆகியன குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது.ஆர்வமுடன் பங்கேற்ற மாணவர்கள்,இரண்டாம் பருவ விடுமுறையான முதல் நாளான இன்றே தங்களது படைப்புகளை தகவல் தொழில்நுட்ப மன்றக் குழுவில் பகிரத் தொடங்கி விட்டனர்.இதன் அடுத்த கட்டமாக மாணவர்களை கல்வி தொடர்பான போஸ்டர்கள் தயாரிக்க தொடர்பணி வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

முயற்சிகள் மேற்கொண்டுள்ள அனைத்து மாணவர்களுக்கும்,பள்ளியின் ICT club சார்பாக வாழ்த்துகளும் அன்புகளும்❣️❣️❣️

மாணவர்களின் படைப்புகளில் சில,





Friday, 18 November 2022

CUBயின் கொடையுள்ளத்துக்கு பெருநன்றிகள்;SmartClass Inauguration


மீள்பதிவு
மூன்றாண்டுகளுக்கு முன் நடந்த
ஆகச்சிறப்பான விழா குறித்த முகநூல் பதிவு.
பெருநன்றிகள் சிட்டி யூனியன் வங்கி❣️❣️
“தாமின் புறுவது உலகின் புறக்கண்டு
காமுறுவர் கற்றறிந் தார்” என்ற உயரிய சிந்தனையில் CUB கும்பகோணமானது எம் பள்ளி மாணவர்களின் நலன் சார்ந்த விடயங்களில் இந்நிதியாண்டில் மட்டும் சற்றேறக்குறைய பனிரெண்டு லட்ச மதிப்பில் மூன்று வகுப்பறைகளை சீரமைத்தல்,மாணவர் மற்றும் ஆசிரியர்களுக்கு தேவையான தளவாட பொருட்கள் மற்றும் முத்தாய்ப்பாக சீர்மிகு வகுப்பறையாக(smart class) இரண்டு வகுப்பறைகளை மாற்றியமைத்துள்ளனர்.
மேலும் எம் பள்ளியின் KG குழந்தைகளுக்கு வண்ணமயமான சீருடைகளுக்கு உதவிய ஆங்கில பட்டதாரி ஆசிரியரின் உறவினருக்கும்,
CUB நிறுவனத்திற்கு எம் குழந்தைகளின் சார்பில் பெருநன்றியும் பெருமகிழ்வும்❤️❤️❤️

சிறப்பு வாய்ந்த முப்பெரும் விழாவின் சிறப்பு விருந்தினராய் இருந்தும்
எம் பள்ளியின் வளர்ச்சியில் உறுதுணையாய் நிற்கும் CUBயின் பொதுமேலாளர் திருமிகு ரமேஷ்,ஆடிட்டரும் எம்பள்ளி ஆங்கில பட்டதாரி ஆசிரியை Sudha Raman அவர்களின் கணவருமான திருமிகு மாருதிராமன்,EBIX smart classesன் மேலாளர் திருமிகு தேவன்,
பள்ளி மற்றும் கிராம வளர்ச்சியில் பெருந்துணையாற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவர் திருமிகு KKS ராஜவேலு,
உதவி வேளாண் அலுவலரும்(ஓய்வு) தலைமையாசிரியர் Suganthi அவர்களின் கணவருமாகிய திருமிகு குமணன் மற்றும் ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் திருமிகு ஜம்புநாதன் அவர்களுக்கும்,வந்திருந்த அருகமை பள்ளி ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்கும்,முன்னாள் மாணவர்களுக்கும் பெருநன்றிகள்❤️❤️❤️

Tuesday, 15 November 2022

குழந்தைகள் தினம் 2022

பேரன் பிறந்த போது மன்னிப்பு கேட்டால் வெளிவிடுகிறோம் என்று சுமார் 3269நாட்கள் சிறையில் கழித்த நேருவிடம் சொன்ன ஆங்கிலேய ஆதிக்கத்தை புறந்தள்ளியவர்,சாலையில் தூரத்தில் போலீஸ் வாகன வெளிச்சத்தில் இந்திரா கைகளில் தவழ்ந்த ராஜீவை கண்டு மகிழ்ந்து "இவர்கள் வெளிச்சத்தில் வாழ தான் நாங்கள் இருளில் உழல்கிறோம்" என கடிதம் எழுதினார்.

அந்த ஆசியஜோதியின் வெளிச்சத்தில் நேற்று (14-11-2022) அவர்தம் பிறந்ததினத்தில்,
எங்கள் பள்ளி குழந்தைகளின் கவிதை,பேச்சு,பாடல் மழையில் நனைந்து,அவர்களோடு நேற்றைய நாளினை கொண்டாடி மகிழ்ந்தோம்.

Friday, 14 October 2022

The Red Balloon-திரையிடல்


தமிழ்நாடு அரசின் வழிக்காட்டலில் நம் பள்ளியில் ஆஸ்கார்,கேன்ஸ் போன்ற பல்வேறு விருதுகளை குவித்த பிரெஞ்ச் குழந்தை திரைப்படமான "தி ரெட் பலூன்' 13-10-2022 அன்று திரையிடப்பட்டது,
திரையிடலின் இறுதியில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடையே கருத்துகள் பரிமாற்றிக் கொள்ளப்பட்டன.

Thursday, 22 September 2022

சிறப்பு காய்ச்சல் முகாம்-2022

பரவி வரும் இன்ஃப்ளுயன்சா காய்ச்சலை கட்டுப்படுத்தும் விதமாக,
தமிழ்நாடு முதலமைச்சரின் வழிக்காட்டுதலின்படி,
தமிழ்நாடு அரசின் சுகாதார துறையின்,பெரும்பனையூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து மருத்துவக் குழு இன்று (22-09-2022) நம் பள்ளியின் அனைதது மாணவர்களையும் பரிசோதித்து,காய்ச்சல் மற்றும் சளியுள்ள மாணவர்களுக்கு மருந்துகள் வழங்கினர்.மேலும் இது போன்ற பரவிடும் நோய்களில் இருந்து நம்மை தற்காத்துக் கொள்ள ஆலோசனைகளையும் வழங்கினர்.

Wednesday, 14 September 2022

ICT Clubன் நன்றி

நம் பள்ளிக்கு எது தேவையென்றாலும் நாம் கேட்டவுடன் செய்யும் மனமும் வளமும் உடைய நிறுவனம் சிட்டி யூனியன் வங்கி,கும்பகோணம் மற்றும் அந்நிறுவனத்துடன் நம் பள்ளிக்கு நெருங்கிய பந்தத்தை ஏற்படுத்தி தந்து,தம் உறவினர்கள் மூலமாகவும் நம் பள்ளி தேவைகளை பூர்த்தி செய்யும் நம் பள்ளியின் ஆங்கில பட்டதாரி ஆசிரியை திருமதி.இரா.சுதா மற்றும் அவர்தம் இணையர் திரு.மாருதிராமன்(CUB, KUMBAKONAM) அவர்களின் மகள் சுரபி ராமன் அவர்கள்,
நம் பள்ளியின்
 ICT Club ற்கு தேவையான Dual Lavlior contensor microphone மற்றும் 150MBpS திறன்கொண்ட TP Link WiFi dongle ஆகியவற்றை அளித்துள்ளார்கள்,அவர்கள் நம் பள்ளியின் ICT Club சார்பாகவும்,தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள்,மாணவர்கள் சார்பாக பெருநன்றியும் பேரன்பும்💐💐💐

Friday, 9 September 2022

தேசிய குடற்புழு நீக்க நாள்-2022


மாணவர்கள் நல்ல உடல்நலத்துடன் இருந்தால் தான்,மனநலன் மிக்கவர்களாக இருக்கமுடியும்.அப்போது தான் அவர்களால் கற்றலில் முழு ஈடுபாட்டோடு இருக்க முடியும் என்பதால் தமிழ்நாடு அரசு, தனது சுகாதாரத் துறையின் மூலம் ஆண்டுக்கு இருமுறை குடற்புழு நீக்கல் மாத்திரைகளை விலையின்றி அரசு பள்ளி மாணவர்களுக்கு அளிக்கிறது.
அதன் தொடர்ச்சியாக நம் பள்ளியில் பயிலும் 1-8 வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் "தேசிய குடற்புழு நீக்கல் நாளான" இன்று 09.09.2022 பெரும்பனையூர் சுகாதார நிலைய செவிலியர் அவர்களால் குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட்டன.

Thursday, 8 September 2022

தூய்மை வாரம்

தூய்மை இந்தியா திட்டத்தின்படி,கல்வி நிறுவனங்களில் தூய்மை வாரம் கடைப்பிடிக்க மாவட்ட மற்றும் வட்டார கல்வி அலுவலர்களின் அறிவுறுத்தலின் படி  நம் பள்ளியில் தூய்மை சார்ந்த செயல்பாடுகள் தினமும் நடத்தப்படுகிறது.அதன் ஒரு நிகழ்வாக 3-8வகுப்பு மாணவர்களுக்கு ஓவியம் மற்றும் பாட்டு போட்டி நேற்று(07.09.2022) நம் பள்ளி வளாகத்தில் நடத்தப்பட்டது.
மேலும் ஆசிரியர்கள் தூய்மை மற்றும் சுகாதாரம் குறித்த பல்வேறு கருத்துகளை மாணவர்களிடம் பகிர்ந்து கொண்டனர்.

Thursday, 1 September 2022

ஜெனிவா உடன்படிக்கை நாள் போட்டிகள்2022

நேற்று வட்டார அளவில், இளையோர் செஞ்சிலுவை சங்கத்தின் சார்பாக, ஜெனிவா உடன்படிக்கையை நினைவுகூறும் விதமாக நடத்தப்பட்ட போட்டியில் நம் பள்ளி மாணவர்கள் பங்கேற்று வெற்றியும் பெற்றனர், போட்டிகளில் பங்கெடுத்த மற்றும் வென்ற மாணவர்களை பாராட்டிய போது,

மூன்றாமிடம் பெற்ற மாணவர்: பேச்சுப்போட்டி, ஜெ.ரஹோத்தமன் 8ம் வகுப்பு,
முயற்சி செய்தவர்கள்:
கட்டுரைப்போட்டி:ம.வைஷ்ணவி 8ம் வகுப்பு
ஓவியப்போட்டி:த.கவின்குமார் 7ம் வகுப்பு.

சுதந்திர தினம் 2022

எம் பள்ளியில் நடைப்பெற்ற 2022ஆம் ஆண்டின் சுதந்திர தின கொண்டாட்டத்தின் காணொளி தொகுப்பு 🇮🇳🇮🇳🇮🇳

https://youtu.be/TirVp2c6lv8