புரவலர்கள்



அவ்வைக்கு அதியமானாய்,எம் பள்ளிக்கு கிடைத்த வரம் இந்திய எண்ணெய் மற்றும் எரிவாயு கழகம்(ONGC,vellakoil,kamalapuram) ஆகும்.
எம் பள்ளியின் அனைத்து தேவைகளையும் அரசுக்கு அடுத்ததாக இந்நிறுவனம் பூர்த்தி செய்து வருகிறது.மாணவர்களின் தாகத்தை தணிக்க மின்மோட்டார்,நீர்த்தொட்டி மற்றும் நீர் சுத்திகரிப்பான் போன்றவற்றை அமைத்துக் கொடுத்தது.
இக்கல்வியாண்டில் ஆழ்துளை கிணறு மற்றும் நீர்தொட்டிகளையும் அமைத்துக் கொடுத்து,எம் மாணவர்களின் மனதிலும்,ஆசிரியர்களின் மனதிலும்,கிராமவாசிகளின் நெஞ்சங்களிலும் என்றும் நீக்கமற நிறைந்து விட்டனர்.

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு.

அல்லவா!!!!!

No comments:

Post a Comment