::::எழில்மிகு
கிராமம்::::
காவிரி பாய்ந்து
வளம் கொழிக்கும் சோழ மண்டலத்தில் அழகாய்,ஆருராம் திருவாரூருக்கு அருகாமையில்
அமைந்துள்ள கிராமம் தான் கீரங்குடி.திருவாரூரிலிருந்து கும்பகோணம் செல்லும்
மார்க்கத்தில் மணக்கால் அய்யம்பேட்டையிலிருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில்
அமைந்துள்ளது.
இவ்வூரைச் சுற்றிலும்
பல புனிதத்தலங்கள் உள்ளன.இக்கிராமத்திற்கு வடக்கே 2 கி.மீ. தொலைவில்
திருவாஞ்சியத்தில் வாஞ்சிநாதர் ஆலயமும்,தெற்கே 3 கி.மீ. தொலைவில் பிரசித்திப்
பெற்ற எண்கன் முருகன் கோயிலும்,மேற்கில் 1 கி.மீ. தொலைவில் தீபங்குடியில்
ஜைனர்களின் திருக்கோயிலும் அமைந்துள்ளன.
கீரங்குடி
கிராமம் பசுமையான வயல்கள் நாற்புறமும் சூழ்ந்த,இயற்கை எழில் கொஞ்சும்
கிராமம்.இங்கு அருள்மிகு மாரியம்மன் ஆலயம்,சிவாலயம்,வினாயகர் கோயிலென வீதிக்கொரு
கோயில் அமைந்துள்ளது.அருகிலுள்ள அய்யம்பேட்டை காளியம்மன் கோயில் திருவிழா
பிரசித்திப் பெற்றது.இங்குள்ள மக்களில் பெரும்பான்மையினர் வேளாண்மையை முக்கிய
தொழிலாகக் கொண்டவர்கள்,குறைந்தளவில் கல்வியறிவு கொண்டவர்கள் இருப்பினும்,தங்கள்
குழந்தைகளின் அறியாமை இருளகல வேண்டுமென உயரிய நோக்கமுடையோர்........

No comments:
Post a Comment