எம் பள்ளி திருவாரூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்(ssa),திருவாருர் மாவட்டக் கல்வி
அலுவலர்,கொரடாச்சேரி ஒன்றிய உதவி தொடக்கக் கல்வி அலுவலர் ஆகியோரின்
கட்டுப்பாட்டின் கீழ் இயங்குகிறது.மேலும் கீரங்குடி கிராம மக்களை உறுப்பினர்களாக
கொண்டு பள்ளி மற்றும் மாண்வர்களின் வளர்ச்சிக்காக கிராம கல்விக்குழு,பள்ளி
மேலாண்மைக்குழு மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகம் ஆகியன அமைக்கப்பட்டு சிறப்பாக
செயல்படுகிறது....
அன்புடையீர்,
ReplyDeleteநான் ஒரு ஓய்வு பெற்ற ஆசிரியன். ஐந்து தலைமுறைகளுக்கு முன் எங்கள் முன்னோர் கீரங்குடியைச் சேர்ந்தவர்கள் என்று என் தந்தையார் சொல்லக் கேட்டிருக்கிறேன். அது எங்கு இருக்கிறது என்று தேடிக்கொண்டிருந்தேன். இன்று அதன் இருப்பிடத்தையும் தெரிந்துகொண்டேன்.அத்துடன் உங்கள் நற்பணிகளையும் அறிந்துகொள்ள வாய்ப்பு கிடைத்தது. பசுமைப்படை, சத்தியசோதனை அங்காடி முதலான பல நிறுவனங்கள் மூலம் மாணவ்ர்களைப் பொறுப்புள்ள குடிமக்களாக வளர வழிகாட்டுவது பற்றி அறிய மகிழ்ச்சி. பல அரசு மேல்நிலைப்பள்ளிகளே தங்களுக்கென்று தனியான இணயத் தகவல்பலகை வைக்கத் தயங்கும் இக்காலத்தில், ஒரு நடுநிலைப்பள்ளி தொழில்நுட்பத்துடன் நடைபோட்டு வலைப்பூ ஏற்படுத்தியிருப்பது மனதுக்கு மிக நிறைவாக உள்ளது.
வாழ்க வளமுடன்
கோதண்டராமன்