Tuesday, 6 August 2013

அரிமாவின் ஆதரவு


அரிமா சங்கம் திருவாரூர் மனுநீதி மூலமாக எம் பள்ளிக்கு PORTABLE WIRELESS AMPLIFIER நன்கொடையாக வழங்கப்பட்டது,இச்சங்கம் ஆருரில் பல சேவைகளை செய்துவருகிறது,அதன் தொடர்ச்சியாக எம் பள்ளிக்கும் இவர்களின் சேவையின் தொடக்கமாய் இந்த AMPLIFIER வழங்கும் விழா 23.07.2013 செவ்வாய் அன்று மாலை நடைப்பெற்றது.இவ்விழாவிற்கு கிராம கல்விக்குழு தலைவர் திரு.KKS.ராஜவேலு அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது.
விழாவில் அரிமா சங்கம் திருவாரூர் மனுநீதி தலைவர் திரு.Ln.நித்தீஷ்(திருமலை லித்தோஸ்) அவர்களும், சித்த மருத்துவர் Ln.Dr.சரவணன் அவர்களும்,ஒய்வு பெற்ற ஆசிரியர் Ln.K.நாராயணசாமி அவர்களும்,Ln.கலைச்செல்வம்(TNEB) அவர்களும் மற்றும் அரிமா சங்க உறுப்பினர்களும்,கிராம கல்விக்குழு,பள்ளி மேலாண்மைக்குழு மற்றும் பெற்றோர் ஆசிரிய கழக உறுப்பினர்களும்,ஆசிரியர்களும்,மாணவர்களும் கலந்துக்கொண்டனர்.நிறைவாக எம்பள்ளி தலைமையாசிரியை நன்றி கூறினார்.....





கல்வி வளர்ச்சி நாள்


பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள்,கல்வி வளர்ச்சி நாளாக எம்பள்ளியில் 15.07.2013 அன்று கொண்டாடப்பட்டது.இதில் மாணவர்கள் பல தனித்திறமைகளை வெளிப்படுத்தினர்.மாணவர்கள்,
  • v  தனிப்பாடல்,குழுபாடல்கள் பாடினர்
  • v  ‘பாரதசமுதாயம்’ என்ற சமுதாய விழிப்புணர்வு நாடகம் நடத்தினர்.
  • v  மாவட்டங்கள் & மாநிலங்களின் பெயர்களை கூறினர்.
  • v  100 பூக்களின் பெயர்களை கூறினர்.
  • v  கவிதை
  • v  பேச்சு,பாடல்(காமராஜர் பற்றி)
பங்குப்பெற்ற அனைத்து மாணவர்களுக்கு பரிசுகளும்,மற்றவர்களுக்கு இனிப்புகளும் வழங்கப்பட்டது.
ஆசிரியர்கள் காமராஜர் பற்றிய செய்திகளும்,கல்வியின் முக்கியத்துவத்தையும் எடுத்துக்கூறினர்.மேலும் இவ்விழாவில் இந்த ஆண்டுக்கான மாணவர் இலக்கிய மன்றமும்,சுற்றுசூழல் மன்றமும் தொடங்கப்பட்டு,மாணவர்களுக்கான பொறுப்புகள் வழங்கப்பட்டது.


Tuesday, 30 July 2013

OUR HEARTY THANKS TO ONGC


இவ்வாண்டு இந்திய எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம்(காவிரி படுகை-நிரவி)-ன் கமலாபுரம் plantலிருந்து எம்பள்ளிக்கு ஆழ்துளை கிணறு மற்றும் நீர்த்தொட்டி அமைத்து தந்துள்ளனர்.....
அவர்களுக்கு எம்பள்ளியின் னமார்ந்த நன்றிகள்.....



Saturday, 29 June 2013

ஆருரின் சின்ன வள்ளுவர்

பா.சுபாஷ் சந்திர போஸ்
பெ/பெ.பாஸ்கர்-தங்கம்,
22,வடக்கு மாட விளாகம்,
திருவரூர்.
ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனை
சான்றோன் எனக்கேட்ட தாய்.
இவர் தமது 9ம் அகவை முதல் 1330 குறளையும் அதற்கான விளக்கமும் கூறி திருவாரூரின் சின்னத் திருவள்ளுவராக வளம் வந்தவர்,பள்ளிகள் தோறும் சென்று சகமாணவர்களுக்கு குறளின் அருமை பெருமைகளைக் கூறி தம் மழலையால் கவர்ந்தவர்,எம் பள்ளிக்கும் வந்திருந்து தமிழின் இனிமையையும்,திருக்குறளின் பெருமைகளையும் கூறியது வியக்க வைத்தது.
இம்மழலையின் சாதனைகளைப் பாரட்டி இவருக்கு பல பட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன.
    திருவாரூரின் சின்னத் திருவள்ளுவர்,
    திருவாரூரின் திருஞானசம்பந்தர்,
CAR LION CITY வழங்கிய குறள்வேந்தன்,
திருவாரூர் மனிதநேயப் பேரவை வழங்கிய குறள்மணிச்சுடர்,
திருவாரூர் தமிழியக்கம் வழங்கிய பாரதிதாசன் விருது,
இவரது சிறப்பினை தமிழக அரசு பாராட்டி சான்றிதழ் மற்றும் விருது வழங்கியுள்ளது.
மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்னோற்றான் கொள்எனுஞ் சொல்.
இவர் தொண்டு மேலும் சிறந்து உலகம் முழுவதும் பரவ எம் பள்ளியின் சார்பாக நெஞ்சார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.