செஞ்சிலுவைச் சங்கம்
செஞ்சிலுவைச் சங்கமானது ஜீன் ஹென்றி
டுனன்ட்(jean henry
dunant) எனும் சுவிச்சர்லாந்து நாட்டைச்
சார்ந்தவரால் தொடங்கப்பட்டது.இது கி.பி.1859ல் ப்ராங்கொ-ஆஸ்திரிய போரில் காயமடைந்த
இராணுவ வீரர்களுக்கு உதவி செய்யத் தொடங்கப்பட்டது.அதன் பின்னர் ஜெனிவாவில் 1864ம்
ஆண்டு உலக அளவிலான செஞ்சிலுவைச் சங்கம் ஆரம்பமானது.இதன் கொடியும்,சின்னமும் சுவிஸ்
நாட்டின் தேசிய சின்னத்திலிருந்து பெறப்பட்டது.
இந்தியாவில் இது இரண்டாம் உலகப்போரின்
போது ஆரம்பிக்கப்பட்டது.1920ம் ஆண்டு இந்தியாவிற்கான நாடாளமன்ற அவையில் இதற்கான
வரைவினை சர் க்லௌடெ ஹில்(sir
claude hill) கொண்டுவந்தார்.அதே ஆண்டு ஜுன் 7ம் தேதி சர்
மல்கொல்ம் ஹைலெய்(sir malcoln
hailey) என்பவரின் தலைமையில் 50 உறுப்பினர்களோடு ஆரம்பிக்கப்பட்டது.
எம் பள்ளியிலும் சிறார்களுக்கான
செஞ்சிலுவைச்சங்கம்,ஆங்கில ஆசிரியை திருமதி.வை.விமலாதேவி-ஐ ஒருங்கிணைப்பாளாராகக்
கொண்டு சிறப்பாகச் செயல்ப்பட்டு வருகிறது.
தேசிய பசுமைப்படை
நமது
இந்திய தேசமானது இயற்கை வளம் நிறைந்த ஒன்று,குறிப்பாக காடுகள்
நிறைந்தது.மரம் வளர்ப்பின் முக்கியத்துவதையும்,காடுகள் பாதுகாப்பின் அவசியதை அனைவருக்கும் கூறுவதற்க்காகவும்,அதிகளவில் மரங்களை
நடுவதற்காகவும் இவ்வமைப்பு ஏற்படுத்தப்பட்டது.எம் பள்ளியிலும் இவ்வமைப்பு உதவி
ஆசிரியை திருமதி.சு.திலகவதி அவர்களை ஒருங்கிணைப்பாளாராகக் கொண்டு சிறப்புடன்
செயல்படுகிறது.
பள்ளி சுகாதாரக் குழுமம்
சுத்தம்,சுகாதாரம்,சுகவாழ்வு எனும் மூன்றினையும் தாரக மந்திரமாகக் கொண்டு இக்குழுமம்
தொடங்கப்பட்டது.மாணவர்களிடத்தில் சுத்தத்தின் மேன்மையினையும்,சுகாதார வாழ்விற்கான வழிமுறைகளையும் எடுத்துக்கூறி அதன்படி நடக்கச் செய்வதே
இக்குழுமத்தின் தலையாயக் கடமையாகக் கொண்டுள்ளது,எம் பள்ளியில் கணித ஆசிரியை
திருமதி.கி.யசோதா அவர்களை ஒருங்கிணைப்பாளாரகக் கொண்டு இக்குழுமம் சிறப்புடன்
செயல்படுகிறது.
மாணவர் இலக்கிய மன்றம்
எம் பள்ளி மாணவரிடத்தில் பொதிந்துள்ள இலக்கிய ஆற்றல்களான
பேச்சு,கட்டுரை,ஒவியம்,கவிதை மற்றும் நடிப்பு போன்றத் திறமைகளை வெளிக்கொணற்வதற்கு
மாதந்தோறும் போட்டிகள் நட்த்தப்படுகின்றன.எம் பள்ளி தலைமையாசிரியை என்.எஸ்.சுகந்தி
அவர்களின் வழிகாட்டுதலில்,உதவி ஆசிரியை சு.திலகவதி அவர்களின் தலைமையில்
நடைப்பெறுகிறது.
No comments:
Post a Comment